ஒரே நேரத்தில் ஐந்து வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதால் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறிலங்கா அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறியதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மதீஷ பத்திரனவிற்கு ஏற்பட்ட காயம்
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியின் போது மதீஷ பத்திரனவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் அவரை போட்டியில் பந்துவீச விடாமல் தடுத்தது, தற்போது அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
பயிற்சி அமர்வின் போது தில்ஷான் மதுஷங்க தனது தொடை தசையில் காயம் ஏற்பட்டதையடுத்து விலகியுள்ளார்.
சிறிலங்கா அணிக்கு பெரும் பின்னடைவு
துஷ்மந்த சமீர மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் சுகவீனம் காரணமாக ரி20 தொடரில் பங்கேற்கவில்லை நுவான் துஷார கைவிரல் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இப்போது செயல்படாத நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தயாராகும் சிறிலங்கா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.