அனுராதபுரத்தின் பல பகுதிகளிலிருந்து வில்பத்து தேசிய பூங்காவுக்கு, காட்டு யானைகளை அனுப்புவதற்கு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை வனவிலங்கு பாதுகாப்புத் துறை ஆரம்பித்துள்ளது.
ஓயாமடுவாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், காட்டு யானைகளின் இருப்பிடங்களைக் கண்காணிக்கவும், அவற்றின் இடம்பெயர்வு பாதைகளை ஆய்வு செய்யவும் ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையின் பல பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும், மனித-யானை மோதலைத் தணிப்பதற்குமாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வனவிலங்கு அதிகாரிகள்,
வனவிலங்கு அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் இலங்கை கடற்படை இந்த முயற்சியில் ஒத்துழைக்கின்றன.
கணக்கெடுப்புகளின்படி, நாட்டில் பயிர் சேதத்திற்கு காட்டு யானைகள் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்,
பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் இது தொடர்பான சம்பவங்கள் பதிவாகின்றன.
பிரச்சினைக்கு தீர்வு
இந்தநிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, யானைகளால் ஏற்படும் பயிர் சேதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமான அனுராதபுரத்தில் வாழும், காட்டு யானைகளை சரணாலயங்களுக்கு அனுப்பும் திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும், இடமாற்ற செயல்முறை திடீரென நிறுத்தப்பட்டதால் நிலைமை மோசமடைந்து, பல பகுதிகளில் யானைகளின் அட்டகாசங்களுக்கு உள்ளாக நேரிட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.