Home முக்கியச் செய்திகள் சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேரஹெர உட்பட பிரதான அலுவலகங்களில் செயற்பாடுகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை (01) குறித்த நடவடிக்கைகள் இடம்பெறாது என குறிப்பிட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறைச் சீர்செய்வதற்காக தொழில்நுட்பப் பிரிவினர் செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி 

இந்தநிலையில், வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் குருநாகல், களுத்துறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மொனராகலை, கண்டி, காலி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள இணையவழி (Online) அலுவலகங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல் உள்ளிட்ட இணையவழி சேவைகளை வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகனப் பதிவு மற்றும் உரிமை மாற்றம் போன்ற அமைப்புகள் பாதிக்கப்படாததால் அந்தப் பணிகள் வழமைபோல் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version