Home இலங்கை சமூகம் ஓட்டுநர் உரிமக் கட்டண திருத்தம்! இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்

ஓட்டுநர் உரிமக் கட்டண திருத்தம்! இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்

0

ஓட்டுநர் உரிமக் கட்டணத்தை திருத்துவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கான அதிகபட்ச வரம்பு 15% ஆகும், ஆனால் அது ஒரு தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அல்ல என்றும் திருத்தத்திற்கான அதிகபட்ச வரம்பு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி முடிவு

ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் கட்டண திருத்தம் ஏற்படுவதால், இந்த திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, வழக்கமாக ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் 15% கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றாலும், இந்த ஆண்டு கட்டண திருத்தம் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

https://www.youtube.com/embed/Xxf9DzVBjXI

NO COMMENTS

Exit mobile version