Home இலங்கை பொருளாதாரம் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி: பல மில்லியன் ரூபாய் வருமானம்

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி: பல மில்லியன் ரூபாய் வருமானம்

0

பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த வருடத்தில் 89,217 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக  விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது அண்மைக்கால வரலாற்றில் கிடைத்த அதிகூடிய வருமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் ஏற்றுமதி

இதன்படி, 44,262 மெற்றிக் தொன் வாசனைப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளது.

மிளகு ஏற்றுமதி மூலம் அதிகூடிய வருமானமாக 51,524 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

வெற்றிலை ஏற்றுமதி மூலம் 11,598 மில்லியன் ரூபாவும், ஜாதிக்காய் ஏற்றுமதி மூலம் 4648 மில்லியன் ரூபாவும் வருமானமாக கிடைத்துள்ளதாக விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version