Home விளையாட்டு 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டி: வெளியேற்றப்பட்டுள்ள இலங்கை அணி

2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டி: வெளியேற்றப்பட்டுள்ள இலங்கை அணி

0

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை 2024 லிருந்து முதல் அணியாக இலங்கை கிரிக்கெட் அணி (Sri lanka) வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி நெதர்லாந்து(Netherland) அணியை வீழ்த்தி 25 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியின் முதல் சுற்றில் இலங்கை அணி தாம் பங்குபற்றிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்ததுடன், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

உலகக் கிண்ணப்போட்டி

எனவே,
பங்களாதேஷ் நெதர்லாந்து போட்டியில் முடிவு எட்டப்பட்டால் இலங்கை முதல் சுற்றிலேயே வெளியேறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றதனால் தொடர்ந்து இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது.

எனினும் எதிர்வரும் 17ம் திகதி இலங்கை அணி நெதர்லாந்து அணியுடன் மற்றுமோரு முதல் சுற்றுப் போட்டியில் போட்டியிட உள்ளது.

இலங்கை வெளியேற்றம்

இந்தப் போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும் இலங்கையினால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் தடவையாகும்.

மேலும், இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களில் மிக மோசமான முறையில் விளையாடி வருவதாக விமர்சனங்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version