இலங்கையில் சுமார் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும் இதுவரையில் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், அத்தியாவசிய சேவைகள் இடையூறு இல்லாமல் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பலதரப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மருந்துகளின் பற்றாக்குறை
இதனடிப்படையில், மருத்துவமனை மட்டத்தில் தட்டுபாடுள்ள மருந்துகளை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருந்து தட்டுப்பாடு குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய, கேட்டறிந்து நோயாளிகளின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.