இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை கடற்றொழிலாளர்களுக்கு அதிருப்தியை தான் ஏற்படுத்தியதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம்(07.04.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை நாம் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
அவரின் இலங்கை விஜயம் எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் என நாங்கள் நம்பியிருந்தோம்.
எனினும், கடற்றொழிலாளர் பிரச்சினை ஒரு ஆலோசனையாக முன்வைக்கப்பட்டிருந்ததே தவிர அதற்கான முழுமையான தீர்வு எட்டப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
