Home இலங்கை சமூகம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவல்

0

E-8 விசா ஒப்பந்தம் முன்னாள் அமைச்சரினால் சட்டவிரோதமாக கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

E-8 விசா முறைமை

மேலும் கருத்து தெரிவித்த கோசல விக்கிரமசிங்க, “E-8 விசா முறை குறித்து சமூகத்தில் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, இந்த விசா 5 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இந்நிலைமையால் பல பிரச்சனைகள் எழலாம் எனவே இது தொடர்பில் எந்த அரசாங்கமும் உடன்பாடுகளை எட்டவில்லை.

மேலும், இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்படவில்லை.

 வண்டோ (Wando) ஒப்பந்தம்

இந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பத்திற்கிணங்க அந்த நாட்டுக்கு சென்று அந்த மாகாண ஆளுநருடன் வண்டோ (Wando) என்ற ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். இதற்கு அமைச்சரவையின் அனுமதியோ அல்லது வேறு எந்த அனுமதியோ அப்போது வழங்கப்படவில்லை.

அனுமதியின்றி இவ்வாறு தனிப்பட்ட தலையீட்டின் பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தவொரு பொறுப்பையும் ஏற்க முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார்.  

அத்துடன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற போர்வையில் பண மோசடி செய்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கோ அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு பணியகம் மேலும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version