Home இலங்கை அரசியல் விமல் வீரவன்ச தாக்கல் செய்த மனு தள்ளுபடி

விமல் வீரவன்ச தாக்கல் செய்த மனு தள்ளுபடி

0

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் (India) இலங்கை (Sri Lanka) அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லாததாக்கத் தீர்ப்பளிக்கக் கோரி இரண்டு அடிப்படை மனித உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுக்கள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் இரண்டு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை

இதனடிப்படையில், இன்று (17) உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன் இந்த விசாரணை இடம்பெற்றது.

இதையடுத்து, தொடர்புடைய மனுக்களைத் தொடர முடியாது என சட்டமா அதிபர் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம், பின்னர் இந்த மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version