Home இலங்கை சமூகம் தொடரும் விலை உயர்வுகள்..! அநுர அரசு மீது நம்பிக்கை இழக்கும் நாட்டு மக்கள்

தொடரும் விலை உயர்வுகள்..! அநுர அரசு மீது நம்பிக்கை இழக்கும் நாட்டு மக்கள்

0

ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாது பால் தேநீரின் விலையும் அதிகரித்துள்ளதுடன் முட்டைக்கும் வரி அறவிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் லங்காசிறியின் மக்கள் குரல் ஆராய்கையில் மக்கள் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

“ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் நாங்கள் வாக்களிப்பது மாற்றத்திற்காகவும், மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகதான், ஆனால் நாங்கள் ஒவ்வொரு முறையுமே ஏமாறுகின்றோம்.

நாட்டின் தற்போதைய நிலையை பொறுத்த வரையில் சோமாலியாவிற்கு அடுத்ததாக இலங்கை தான் என்பது போல உள்ளது.

கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது நாம் இன்னும் பின்னடைவை சந்தித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்..

NO COMMENTS

Exit mobile version