Home இலங்கை சமூகம் காதலர்களுக்கு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

காதலர்களுக்கு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

0

நாளை (14.02.2025) வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ எனும் தலைப்பில்  ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காதலர் தினம்

குறித்த பதிவில் “நீ ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தன்று, அதனை கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன், உன் பெற்றோர் உனக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை யோசி” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் பெண் ஏதேனும் சிக்கலை சந்தித்தால், 109 தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version