Home இலங்கை சமூகம் இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்

இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்

0

பாணந்துறை கடலில் தத்தளித்து கொண்டிருந்த தாயையும் அவரது மகளையும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.

நேற்று காலை பாணந்துறை கடற்கரையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் புஷ்பகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தனுக ஆகியோர் இந்த அதிரடி செயலை செய்துள்ளனர்.

மேலதிக சிகிச்சை

காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கும் மகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொல்கசோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 6 வயது சிறுமியும் 38 வயதுடைய அவரது தாயும் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Source: https://tamilwin.com/article/sri-lanka-police-save-life-of-mother-and-daughter-1714624586

NO COMMENTS

Exit mobile version