இலங்கையின் சனத் தொகை கடந்த இரண்டு வருடங்களில் சடுதியாக குறைந்துள்ளதாக புள்ளிவிபர தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022ம் ஆண்டு உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் பிரகாரம் இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியே இருபத்தி ஒரு லட்சத்தி எண்பதினாயிரம் என்பதாக தகவல்கள் வௌியாகியிருந்தன.
எனினும் தற்போதைக்கு நம் நாட்டின் சனத்தொகை , இரண்டு கோடியே இருபது லட்சத்தி நான்காயிரம் அளவில் இருப்பதாக சனத்தொகை தொடர்பான உத்தியோகப்பற்றற்ற புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஜிம்பாப்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய நாணய அலகு
இலங்கையின் சனத் தொகை
அதன் மூலம் கடந்த 2022ம் ஆண்டைவிட தற்போதைக்கு ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் பேர் இலங்கையின் சனத்தொகையில் இருந்து குறைவடைந்துள்ளனர்.
மரண வீதம் அதிகரித்துள்ளமை மற்றும் வேறு நாடுகளில் குடியேறும் மக்கள் தொகை அதிகரிப்பு என்பன இதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |