Home இலங்கை சமூகம் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலுக்காக 225,000 அரசாங்க ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்களென்று எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆணையாளர் நாயகம், தேவைப்பட்டால்  மாத்திரம் இராணுவத்தினரின் உதவியையும் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

கடமையில் ஈடுபடுத்தப்படும் அரச ஊழியர்கள் 

தற்போது தேர்தல் கடமைகளுக்காக அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகங்களில் 700 உத்தியோகத்தர்களே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை இந்த அதிகாரிகளின் சேவை தேவைப்படுவதாகவும் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிராம அலுவலக உத்தியோகத்தர்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை எந்தவொரு தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version