Home இலங்கை அரசியல் நாட்டில் மிக முக்கியமான அடுத்த இரண்டு வாரங்கள்

நாட்டில் மிக முக்கியமான அடுத்த இரண்டு வாரங்கள்

0

நாட்டில், அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்  அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார். 

நாரம்மல பிரதேசத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ரணிலுக்கு வாக்களிப்போம்..

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்போம்.

எதிர்க்கட்சிகள் இரண்டு ஆண்டுகளாக தங்கள் சொந்த அரசியல் திட்டத்தை நிறைவேற்றின. இரண்டு வருடங்கள் வாழும் உரிமைக்காகப் போராடினார்கள்.

மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, அடுத்த 5 வருடங்களை வழங்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கோருகின்றார்.

அந்தக் கோரிக்கையை  மக்கள் நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்  என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version