Home இலங்கை சமூகம் உலகில் 21 வது இடத்தில் இலங்கை – எதற்கு தெரியுமா…!

உலகில் 21 வது இடத்தில் இலங்கை – எதற்கு தெரியுமா…!

0

இலங்கை (srilanka) தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்களில் பட்டியலில் உலகில் 21 ஆவது இடத்தில் உள்ளதாக இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான சஜீவன அமரசிங்க (sajeewana amarasinghe) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்கள் வீதம் அதிகமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் 

இதேவேளை, நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 8 தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

மனச்சோர்வு மற்றும் பல்வேறு மனநிலை காரணமாக குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version