Home இலங்கை சமூகம் ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாதுகாப்பு சார்ந்த உதவி!

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாதுகாப்பு சார்ந்த உதவி!

0

2025 நிதியாண்டில் ஜப்பானின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ்
ஜப்பானிடமிருந்து பாதுகாப்பு உதவி பெறும் எட்டு நாடுகளில் இலங்கையும்
ஒன்றாகும் என்று ஜப்பானின் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு திறன்களை மேம்படுத்துவதை
நோக்கமாகக் கொண்ட இந்த உதவியில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் அடங்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவ உறுதிப்பாடு 

இலங்கையை தவிர, பயனாளிகளாக பட்டியலிடப்பட்டுள்ள பிற நாடுகளில் தாய்லாந்து,
டோங்கா, கிழக்கு திமோர், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா மற்றும்
பிலிப்பைன்ஸ் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ உறுதிப்பாடு காரணமாக இந்தோ-பசிபிக்
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில்,
பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளை
ஆதரிப்பதற்காக, ஜப்பான 2023 ஏப்ரலில் இந்த உதவி திட்டத்தை ஆரம்பித்தது.

ஜப்பானின் 2025 நிதியாண்டு பாதீட்டில் இந்த உதவி திட்டத்துக்காக, 8.1
பில்லியன் யென் அதாவது 56 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version