Home இலங்கை பொருளாதாரம் இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் – மத்திய வங்கியின் தகவல்

இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் – மத்திய வங்கியின் தகவல்

0

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 8 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 9 வரையிலான காலகட்டத்தில் இந்த சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2025ஆம் ஆண்டில், ரூபாயின் மதிப்பு டொலருக்கு எதிராக 5.6% சரிந்தது, மேலும் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 0.2% என்ற சிறிய அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதற்காக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு சரிவிற்கான முக்கிய காரணங்கள்

இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான அதிக செலவு, அத்துடன் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளிலிருந்து நாட்டிற்குள் வரும் அந்நியச் செலாவணி வரத்து குறைதல் ஆகியவை ரூபாயின் மதிப்பு சரிவிற்கான முக்கிய காரணங்கள்.

இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்கள் தங்களது டொலர் வருமானத்தை ரூபாவாக மாற்றுவதை தாமதப்படுத்தியுள்ளனர்.

அரசாங்க பத்திரங்கள் மற்றும் கொழும்புப் பங்குச் சந்தை வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியதும் ரூபாயின் மதிப்பு சரிவதற்குக் காரணம்.

இந்த காலகட்டத்தில் இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதம் சரிந்த அதேவேளையில், மற்ற பிராந்திய நாடுகளின் நாணயங்களும் டொலருக்கு எதிராக மதிப்பிழந்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

YOU MAY LIKE THIS VIDEO


Source: https://tamilwin.com/article/sri-lanka-rupee-rate-today-in-sri-lanka-1781249873

NO COMMENTS

Exit mobile version