Home இலங்கை பொருளாதாரம் மீட்சி காணும் இலங்கையின் பொருளாதாரம் – ப்ளும்பேர்க்

மீட்சி காணும் இலங்கையின் பொருளாதாரம் – ப்ளும்பேர்க்

0

இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை நோக்கிச் செல்வதாக
ப்ளும்பேர்க் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி 2018ஆம் ஆண்டு
தொற்றுநோய்க்கு முந்திய நிலைகளை விட அதிகமாக இருக்கும் என்று கணிப்புகள்
தெரிவிக்கின்றன.

பொருளாதார மீட்சி

அண்மைய ப்ளுமபேர்க் பொருளாதார அறிக்கையின்படி, இந்த ஆண்டும் இலங்கையின்
அடுத்த ஆண்டும் பொருளாதார மீட்சி தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, 2024ஆம் ஆண்டில் 5 சதவீத வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி
வளர்ச்சியையும், அதைத் தொடர்ந்து 2025 இல் 3.5 சதவீத விரிவாக்கத்தையும், 2026
இல் 2.9 சதவீத வளர்ச்சியையும் கணித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

இந்த நிலையில், குறித்த நீடித்த அபிவிருத்தி வளர்ச்சி, 2018 அபிவிருத்தி
உச்சத்தையும் தாண்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்திற்குப் பின்னர் ஒரு
குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கிறது என்றும் ப்ளும்பேர்க்
தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version