Home இலங்கை பொருளாதாரம் முதன்முறையாக 10 பில்லியன் டொலரை கடந்த இலங்கையின் ஏற்றுமதி வருவாய்

முதன்முறையாக 10 பில்லியன் டொலரை கடந்த இலங்கையின் ஏற்றுமதி வருவாய்

0

2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

இது ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 10.437 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க, ஜூலை 2026இல் நாட்டின் ஏற்றுமதி செயல்திறன் குறித்த புள்ளிவிவரங்களை, இன்று (31.08.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டார்.

ஓர் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை 10.437 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார்.  

 

Source: https://tamilwin.com/article/sri-lanka-s-export-earnings-10-billion-1788169850

NO COMMENTS

Exit mobile version