Home இலங்கை கல்வி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும்  திறக்கப்படவுள்ளன. 

மீள ஆரம்பம்

தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. 

இதேவேளை,  எதிர்வரும் ஜீலை மாதம் 24ஆம் திகதி வரை இந்த தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

YOU MAY LIKE THIS VIDEO


 

Source: https://tamilwin.com/article/sri-lanka-schools-re-open-1776332098

NO COMMENTS

Exit mobile version