இஸ்ரேலின் பெயரைக் குறிப்பிடாமல் கத்தார் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைகியுடன் இன்று தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
மக்களினது ஆதரவு
அந்த உரையாடலில், சமீபத்திய தாக்குதல்கள் குறித்து இலங்கையின் கவலை வெளிப்படுத்தப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆதரவு கத்தாருக்கு அறிவிக்கப்பட்டது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் இஸ்ரேல் பற்றிய எந்த விடயத்தையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
அண்மையில் கத்தாரில் இருந்த ஹமாஸ் அதிகாரிகளை இலக்குவைத்து இஸ்ரேல் துல்லியமான வான்வழித் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
