Home இலங்கை சமூகம் 10 இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

10 இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

0

2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் தற்போது வரை இலங்கைக்கு பிரவேசித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று(29) பிற்பகல் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரவேற்பு

இலங்கையின் 1,000,000வது சுற்றுலா பயணியை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைபவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, அயர்லாந்தின் டப்ளினில் இருந்து வந்த போல் ரோய், இலங்கைக்கு 1,000,000வது சுற்றுலாப் பயணியாக வந்துள்ளதுடன் அவருடன் பெண் ஒருவரும் வந்துள்ளார்.

அவர்கள் நேற்று 12.40 மணியளவில் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.   

Source: https://tamilwin.com/article/sri-lanka-tourist-places-and-tourist-1719708890

NO COMMENTS

Exit mobile version