Home இலங்கை குற்றம் இலங்கையில் மற்றுமொரு மோசடி அம்பலம் – வெளிநாட்டவர்களை ஏமாற்றிய கடைக்காரர்

இலங்கையில் மற்றுமொரு மோசடி அம்பலம் – வெளிநாட்டவர்களை ஏமாற்றிய கடைக்காரர்

0

இலங்கை வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை உணவக உரிமையாளர் ஏமாற்றிய நிலையில், நீதிமன்றம் வரை அபராதம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் புறக்கோட்டையில் ஒருவர் காலில் அணியும் சாதாரண பாதணிக்கு 9800 ரூபாவை வெளிநாட்டு பெண்ணிடம் அறவிட முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

வசந்த காலத்தில் ஜப்பான் போல் காட்சியளிக்கும் இலங்கை

காலணி கொள்வனவு

வெளிநாட்டை சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருவர் பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக புறக்கோட்டைக்கு

அவர்கள் கடைக்காரரிடம் கழிவு விலையில் காலணியை கொள்வனவு செய்ய முடியுமா என்று கேட்ட பின் பாதணிகளை பார்வை இட்டுள்ளனர்.

குறித்த பெண் ஒரு சாதாரண பாதணியின் விலையை கேட்ட பொழுது கடைக்காரர் 9800 ரூபா என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பாதணியில் விலை மிக அதிகம் என தெரிவித்ததுடன் குறித்த வெளிநாட்டவர்கள் அதனை வாங்க மறுத்து கடையை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.

உலகில் முதன்முறையாக சந்திரனின் மர்ம பகுதியை ஆய்வு செய்யவுள்ள சீனா

இதன்போது வெளிநாட்டவர்கள் பதிவு செய்த காணொளியை அழிக்குமாறு கடைக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் பல மோசடியாளர்கள் உள்ளதாகவும், இங்கு வரும் வெளிநாட்டவர்கள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என அவர்கள் தமது சமூக வலைத்தளம் ஊடாக தெரிவித்துள்ளனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version