Home இலங்கை சமூகம் வடக்கில் தனியாருடன் இணைந்த சேவை பிரச்சினைகளை தோற்றுவிக்கும்! எடுத்துரைக்கும் இ.போ.ச தரப்பு

வடக்கில் தனியாருடன் இணைந்த சேவை பிரச்சினைகளை தோற்றுவிக்கும்! எடுத்துரைக்கும் இ.போ.ச தரப்பு

0

 புதிய பேருந்து நிலையத்தில் தனியாருடன் இணைந்து சேவையில் ஈடுபடுவதில் தமது தொழிலாளர்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுவதாக  இலங்கை போக்குவரத்து சபையின் வடக்குபிராந்திய முகாமையாளர் கந்தசாமி கேதீசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

“கடந்த 17.01.2025 ஆம் அன்று வடக்கு மாகாண ஆளுநருடன் எமது சந்திப்பு
இடம்பெற்றது.

தூர சேவை பேருந்துகள் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில்
கடமையாற்றுமாறும் கோரப்பட்டது. அதற்கு நாங்கள் இலங்கை போக்குவரத்து
சபையின் தலைவருடைய ஆலோசனைக்கு அமைவாக தான் செயற்படுவோம் என
தெரிவித்திருந்தோம்.

 போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்து சபையினுடைய தலைவரினுடைய கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து மாவட்டங்களுக்குமான இணைந்த நேர அட்டவணையை
தயாரித்து எமது தற்போதைய பேருந்து நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்து தூர
பேருந்து சேவை நிலையத்திற்குச் சென்று பின்னர் சேவையினை தொடருமாறு அந்த
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை எமது சபை தலைவரும் உறுதிபடுத்தியுள்ளார்.

எங்களுக்கு எங்களுடைய பேருந்து நிலையம் போதுமானது. எமது பேருந்து நிலையத்தை
கட்டித் தருமாறு நாங்கள் யாரிடமும் கோரவில்லை.

எமது பேருந்து வீதிகளில் தரித்து
நிற்கவில்லை. எமது வளாகத்தில் தரித்து நின்றே செயலாற்றுகின்றது.10 மில்லியன்
ரூபாய் வடக்கின் வசந்தம் திட்டத்தில் எமது பேருந்து நிலையம் சிறப்பாக
அமைக்கபட்டுள்ளது.

பொது அமைப்புகள்

பொதுமக்களோ பொது அமைப்புகளோ எமது நிலையத்திற்கு எதிராக எந்த
முறைப்பாடும் வழங்கவில்லை.

வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது .அதில் ஒரு பகுதியையாவது
பிரித்து தாருங்கள் என எமது இ.போ.ச .தொழிலாளிகள் கோரிக்கை
விடுத்தனர்.

அவர்களுடைய கோரிக்கை இன்னமும் நிறைவேற்ற படாது உள்ளது’’ என்றார்.

NO COMMENTS

Exit mobile version