Home இலங்கை சமூகம் செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்

0

செம்மணி புதைக்குழி மூலமான அரசியல் எமக்கு வேண்டாம் தீர்வுதான் வேண்டும் என மலையக மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை ஜனநாயக இளைஞர் காங்கிரஸின் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட தவிசாளர் லதுர்ஷான் வெள்ளசாமி (Ladurshan Vellaswamy) முன்வைத்துள்ளார்.

இந்தநிலையில், சமீப காலமாக உலகலாவிய ரீதியில் பேசு பொருளாகமாறியுள்ள செம்மணி புதைக்குழி
மூலம் எம் தமிழ் இன மக்களுக்கு தீர்வு வேண்டுமே தவிர பரிதாபங்கள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களின் உரிமை

யுத்த காலத்தில் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியோ, தீர்வோ
கிடைக்கப்படாத நிலையில் செம்மணி புதைக்குழியானது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது வேதனையளிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி புதைக்குழி தொடர்பாக அரசாங்கம் முழு கவனத்தை செலுத்துவதன் மூலம்
செம்மணி புதைக்குழிக்கான நிரந்தர தீர்வை பெற முடியும் என நம்புவதோடு வடக்கு
கிழக்கு மற்றும் இலங்கை வாழ் அனைத்து தமிழர்களின் உரிமைக்காக மலையக இளைஞர்
என்றும் கைகோர்ப்போம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version