Home விளையாட்டு இங்கிலாந்து செல்லவுள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெப்ரி வென்டர்சே

இங்கிலாந்து செல்லவுள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெப்ரி வென்டர்சே

0

இலங்கை (srilanka) மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் நாளை (15) இங்கிலாந்து செல்லவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் (Sri Lanka Cricket) அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 11ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், அன்றைய தினம் இவ்விரு வீரர்களும் செல்ல முடியாமல் போனது.

அப்போது அவர்களுக்கு விசா கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையிலேயே இவர்கள் இருவரும் நாளை (15) இங்கிலாந்து செல்லவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-vs-england-test-match-2024-1723644706

NO COMMENTS

Exit mobile version