Home விளையாட்டு இலங்கை – நியூஸிலாந்து ஒரு நாள்,ரி 20 தொடர் : வெளியானது போட்டி அட்டவணை

இலங்கை – நியூஸிலாந்து ஒரு நாள்,ரி 20 தொடர் : வெளியானது போட்டி அட்டவணை

0

இலங்கைக்கு(sri lanka) விஜயம் செய்யவுள்ள நியூஸிலாந்து(new zealand) அணி இரண்டு போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தப்போட்டிகள் தம்புள்ளை(dambulla) மற்றும் கண்டியில்(kandy) அமைந்துள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இரு அணிகளும் பங்கேற்கவுள்ள ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 ரி20 போட்டிகள்

இதன்படி எதிர்வரும் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் தம்புள்ளை மைதானத்தில் ரி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஒருநாள் போட்டிகள் 

அதேபோன்று ஒருநாள் போட்டிகள் 13 ஆம் திகதி தம்புள்ளையிலும் 17,19 ஆம் திகதிகளில் பல்லேகலையில் அடுத்த இரண்டு போட்டிகளும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version