Home இலங்கை அரசியல் நீதியினை பெற்றுத்தராத தமிழரசு கட்சியால் பிளவடைந்த தமிழ் தேசிய அரசியல்

நீதியினை பெற்றுத்தராத தமிழரசு கட்சியால் பிளவடைந்த தமிழ் தேசிய அரசியல்

0

தமிழரசு கட்சி சரியான வகையில் தமிழ் மக்களுக்கு நீதியினையும் நியாயங்களையும்
பெற்றுக் கொடுக்குமாக இருந்திருந்தால் நாங்கள் சுயேட்சை குழுவாக போட்டியிட
வேண்டிய தேவை நமக்கு இருந்திருக்காது என நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் சுஜிந்தன்
தெரிவித்துள்ளார்.

வண்டில் சின்னத்தில் போட்டியிடும் சமூக மேம்பாட்டு இணையத்தின் அலுவலகம் நேற்று சுஜிந்தன் தலைமையில் வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

அதில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசு கட்சியினர், தங்களுடைய சுயலாப அரசியலுக்காகவும், தங்களுடைய சுய
தேவைகளுக்காகவும், தங்களுடைய குடும்பங்களுக்காகவும், தங்களுடைய சுகபோக
வாழ்க்கைகளுக்காகவும் அவர்கள் அரசாங்கங்களோடு சேர்ந்து செயற்பட்டு தமிழ்
மக்களை பகடை காயாக்கி வந்தவர்கள்.

அவர்கள் தற்போது வடக்கில் மதுபான நிலையங்களுக்கு அனுமதிகளை பெற்றுக்
கொடுத்திருக்கின்றார்கள். தமிழர்களுக்கு சாபம் விளைவிக்க வேண்டும்
என்பதற்காகவே தமிழரசு கட்சி இவ்வாறான வேலைகளை செய்துள்ளது.

இந்த விடயத்தினைநான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழர்களுக்காக தமிழர் கட்சியானது சரியாக
செயல்படவில்லை என்பதனையும் நான் இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூக மேம்பாட்டு இணையத்தின்
சின்னமான வண்டில் சினானத்துக்கு வாக்களித்து எமக்கு நாடாளுமன்றத்தில்
சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் நாங்கள் தமிழ் மக்களுக்கு தேவையான
சுயநிர்ணயம், தமிழ் தேசியம் அபிவிருத்தி போன்ற விடயங்களை பெற்றுக்
கொடுப்பதற்கு வழிவகுப்போம்” என்றார். 

you may like this

NO COMMENTS

Exit mobile version