Home இலங்கை சமூகம் இலங்கை நடிகர் தர்ஷன் இந்தியாவில் கைது! பெண் வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு

இலங்கை நடிகர் தர்ஷன் இந்தியாவில் கைது! பெண் வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு

0

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இலங்கை நடிகர் தர்ஷன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் தர்ஷன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

தகராறு 

சென்னையில் கார் பார்க்கிங் விவகாரத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோர் ஜே.ஜே நகர் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர்.

தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக ஜே.ஜே.நகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.  

முறைப்பாடு 

அதேசமயம், நடிகர் தர்ஷன் தரப்பும் முறைப்பாடு அளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இதனைத்தொடர்ந்து, இரு தரப்பு முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த தகராறில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்த நிலையில்,இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version