Home இலங்கை சமூகம் கனடாவில் இலங்கைத் தமிழர் அதிரடியாக கைது !

கனடாவில் இலங்கைத் தமிழர் அதிரடியாக கைது !

0

கனடாவில் (Canada) போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் (Sri Lanka) தமிழர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்டாரியோவின் (Ontario) விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே (Whitchurch-Stouffville) பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி (Kapilarasu Karunanidhi) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீது பிக்கரிங் (Pickering) பகுதியில் போலி இலங்கை கடவுச்சீட்டு மூலம் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு

இந்தநிலையில், இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கணக்கொன்றை ஆரம்பிக்க முயற்சித்ததாகவும் அது மோசடியானது என கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டர்ஹாம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த காவல்துறையினர் போலியான இலங்கை கடவுச்சீட்டு, முற்றிலும் போலியான ஆவணம் மற்றும் வருமானம் பெறுவதற்கான மோசடி ஆவணங்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார் என கண்டுபிடித்துள்ளனர்.

போலி ஆவணம் 

இதனடிப்படையில் குறித்த நபர் மீது இரண்டு போலி ஆவணம் வைத்திருந்தமை மற்றும் 5,000 டொலருக்கு கீழ் இரண்டு மோசடி முயற்சிகள் உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், நீதிமன்றில் அவருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sri-lankan-arrested-using-fake-passport-in-canada-1723993011

NO COMMENTS

Exit mobile version