Home அமெரிக்கா ட்ரம்பின் பிரம்மாண்ட விருந்தில் கலந்துகொண்ட இலங்கையர்..!

ட்ரம்பின் பிரம்மாண்ட விருந்தில் கலந்துகொண்ட இலங்கையர்..!

0

அமெரிக்காவைச் சேர்ந்த இலங்கையில் பிறந்த சமத் பலிஹாபிட்டிய எனும் தொழிலதிபர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய செயற்கை நுண்ணறிவு(AI) திட்டத்திற்கான இரவு விருந்தில் பங்கேற்றுள்ளார்.

மைக்ரோசொப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சேம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பல தொழில்நுட்பத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் விருந்துகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் ரோஸ் கார்டனில் குறித்த இரவு விருந்து நடத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் மூத்த நிர்வாகி

இலங்கையில் பிறந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய 49 வயதான கனேடிய-அமெரிக்கரான சமத் பலிஹாபிட்டிய, ஓல்-இன்’ போட்காஸ்டின்(All-In podcast) சமூக மூலதன நிறுவனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

அவர் இந்த நிகழ்வுக்கு, தொழில்நுட்ப நிறுவனராக அழைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மார்க் ஜுக்கர்பெர்க்கின் அழைப்பின் பேரில் அவர் பேஸ்புக்கில் மூத்த நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version