Home இலங்கை சமூகம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் பலி

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் பலி

0

அவுஸ்திரேலியாவில் (Australia) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து கடந்த  10.05.2025 டாஸ்மேனியாவின் Travellers Rest உள்ள Bass நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 28 வயதான தாரக விஜேதுங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

உயிரிழந்த இளைஞன் ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) இரத்தினபுரி மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டவர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த இடத்திலேயே இளைஞன் உயிரிழந்ததாகவும் காரின் ஓட்டுநர் போதைப்பொருள் மற்றும் மது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version