ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (19) காலை இலங்கை வந்தடைந்ததுள்ளது.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga), வீரர்கள் சரியாக விளையாடாததால் ரி20 தொடரில் இருந்து விலக நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரி20 தொடரில் இருந்து விலகியமைக்கு அணி தலைவர் என்ற ரீதியில் வருந்துவதாக ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.
பணம் செலுத்தி வெளியேற்றம்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “வீரர்களாகிய நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும்.
வீரர்களாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை, துடுப்பாட்டம், கலத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்படவில்லை,” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று விமான நிலையத்திலிருந்து பணம் செலுத்தி வசதி செய்ய வேண்டிய “சில்க் ரூட்” முனையம் வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வர ஏற்பாடு செய்திருந்தனர்.
