இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தென்னிலங்கையில் செயற்படும் ஒரு பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர், தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்
முன்னதாக, இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரபாத் மதுஷங்கவை கைது செய்வதற்கான சிவப்பு அறிக்கையை இன்டர்போல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், முதலில் டுபாய்க்கு தப்பிச்சென்று அதன் பின்னர் ஓமானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதுஷங்கவை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, வெளிநாட்டில் இருந்தாலும் தென் மாகாணங்களில் உள்ள தனது சகாக்களை பயன்படுத்தி போதைப்பொருள் மற்றும் கொலைக் குற்றங்களை அவர் தொடர்ந்தும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
