Home இலங்கை சமூகம் உலக கலாசார பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படவுள்ள இலங்கையின் மரபுரிமைச் சின்னம்

உலக கலாசார பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படவுள்ள இலங்கையின் மரபுரிமைச் சின்னம்

0

சீகிரியா யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த திணைக்களத்தின் அத்தியட்சகர் துசித் மென்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீகிரியா நீக்கப்படும் அபாயம்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
சீகிரிய குன்றில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டுமானங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்.அவற்றை அகற்றுவதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவில்லையாயின் யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து சீகிரியா நீக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

தற்போதைக்கு அவ்வாறான அபாயம் இல்லை என்றாலும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற முற்படாவிட்டால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version