Home இலங்கை சமூகம் இந்திய கடற்றொழிலாளர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்

இந்திய கடற்றொழிலாளர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்

0

தலைமன்னார் அருகே இலங்கை கடற்பரப்பில் கவிழ்ந்த இந்திய மீன்பிடி படகில் இருந்த
நான்கு இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

பேரிடர் எச்சரிக்கை கிடைத்ததும், வட மத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும்
படைப் பிரிவினர், மீட்பு பணியை விரைவாக மேற்கொண்டு குறித்த கடற்றொழிலாளர்களை
மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட உதவிகள்

இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட மீட்கப்பட்ட
கடற்றொழிலாளர்கள், கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டு தேவையான உதவிகள்
வழங்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அவர்கள் அனைவரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version