டோஹாவில் இருந்து பிரான்ஸிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
பறந்து கொண்டிருந்த விமானம் அவசர நிலை கருதி, ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இலங்கைப் பெண்
முன் அறிவிப்புகளின்படி, மருத்துவக் குழுக்களும் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸிற்கு சென்ற 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.