புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதற்காக இலங்கையர்கள் (sri lankan)நாளொன்றுக்கு 121 கோடி ரூபாவை செலவழிப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகி உள்ளது.
இந்த தகவலை மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.இது தெடார்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாளாந்தம் 100 மரணங்கள்
நாட்டில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் நாளொன்றுக்கு 100 மரணங்கள் பதிவாகி வருகின்றன.
தினசரி பதிவாகும் மரணங்களில் பத்துக்கு எட்டு வீதமானவை தொற்றா நோய்களினால் ஏற்படுகின்ற நிலையில் அவற்றில் அதிகமான மரணங்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் ஏற்படுகின்றது.
சமூக ரீதியான பிரச்சினைகள்
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் நாட்டில் பொருளாதார, சுகாதார மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.
