Home இலங்கை குற்றம் இலங்கையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம்

இலங்கையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம்

0

குற்றவாளிகளை அடையாளம் காண AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் முகப் படங்களை உருவாக்கும் திட்டம் வெற்றிகரமாக உள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குமார தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளின் விளக்கங்களின் அடிப்படையில் குற்றப்பிரிவு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட படங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

AI தொழில்நுட்பம் 

இதுவரை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளின் 5 படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த படங்களின் அடிப்படையில் இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/sri-lankan-police-using-ai-to-find-criminals-1749261126

NO COMMENTS

Exit mobile version