Home இலங்கை பொருளாதாரம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

கடந்த 6 மாத காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 2.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கையிருப்பில் உள்ள நாணயத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வணிக வங்கிகள்

புழக்கத்தில் உள்ள பணத்தின் அதிகரிப்பு மற்றும் வணிக வங்கிகள் மத்திய வங்கியில் வைத்திருக்கும் வைப்புத்தொகை அதிகரிப்பு இதற்கான காரணமாகும்.

அண்மைக்காலமாக சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் ஆடை துறை ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றினால் அதிகளவான டொலர்கள் உள்வந்தமை இதற்கான பிரதான காரணங்களாகும்.

NO COMMENTS

Exit mobile version