ஜேர்மன்(germany) மியூனிக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சிவில் பொறியியல் துறையில்கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லசித் யசோதா குரூஸ் புள்ளே என்ற இந்த மாணவன் நீர்கொழும்பு(Negombo) கொச்சிக்கடையை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி, சிம்பாப்வே இளைஞர்களுடன் சென்றபோது சம்பவம்
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச்(kilinochchi) சேர்ந்த இளைஞன் மற்றும் சிம்பாப்வேயைச்(Zimbabwe) சேர்ந்த இளைஞனுடன் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போதே அவர் காணாமற் போயுள்ளதாக மாணவனின் சகோதரி சாமோடி மிலேஷானி தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு
தனது இளைய சகோதரர் காணாமல் போனமை தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு கோரி வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்யவுள்ளதாக மிலேஷானி மேலும் தெரிவித்துள்ளார்.
சில குழுக்கள் தனது தம்பியை இரகசியமாக மறைத்து வைத்திருப்பதாக வலுவான சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.