தமிழ் நாட்டில் இருந்து இலங்கை தமிழ் அகதிகளை திருப்பியனுப்புவதை
யு.என்.எச்.சீ.ஆர் என்ற ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம்
நிறுத்தியுள்ளது.
ஹிந்து நாளிதழ் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.
இதன்படி தாம் இலங்கைக்கு திரும்பிச்சென்றால், கைது செய்யப்படும் அபாயம்
இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதிகள்
நிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை தமிழ் அகதிகள்
இலங்கைக்கு திரும்பிச்சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய
குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு பேர் யாழ்ப்பாணத்திலும், கட்டுநாயக்க விமான
நிலையங்களிலும் அண்மைக்காலங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை
அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஏதிகளுக்கான
உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
2002 முதல், யு.என்.எச்.சீ.ஆர் ,18,643 இலங்கை தமிழர்களை தமிழகத்தில் இருந்து
இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் குடியேற்ற விதிகளை மீறியதற்காக, அகதிகள் கைது செய்யப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இலங்கை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் வரை,
அவர்களை திருப்பி அனுப்பும் திட்டங்கள் முன்னெடுக்கப்படாது என்று
யுன்என்எச்சீஆர் தெரிவித்துள்ளது.
