Home விளையாட்டு மூன்றாவது டெஸ்ட் போட்டி : இலங்கை அணியில் மாற்றம்

மூன்றாவது டெஸ்ட் போட்டி : இலங்கை அணியில் மாற்றம்

0

இலங்கை(sri lanka) மற்றும் இங்கிலாந்து(england) அணிகளுக்கு இடையில் நாளை (06) ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா பெயரிடப்படவில்லை.

அவருக்கு பதிலாக விஷ்வா பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அணியில் இடம்பிடித்த குசல் மென்டிஸ்

நிஷான் மதுஷ்காவுக்குப் பதிலாக குசல் மென்டிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணி வருமாறு,

திமுத் கருணாரத்ன, பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ்,தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), கமிந்து மெண்டிஸ்,மிலன் ரத்நாயக்க, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார், அசித பெர்னாண்டோ 

Source: https://ibctamil.com/article/sri-lankan-team-is-named-for-the-third-test-match-1725558123

NO COMMENTS

Exit mobile version