அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த அதிக இறக்குமதி வரி தொடர்பில்
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இலங்கைக் குழு அமெரிக்க வர்த்தகத்துறை தலைவர் ஜேமிசன் கிரீரை சந்திக்கும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு எதிர்வரும் 22ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியுறவு அமைச்சகம், வர்த்தக அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின்
அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த
பெர்னாண்டோ கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்தும் முனைப்பு
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா பல நாடுகள் மீது கடுமையான வரிகளை அறிவித்தது.
இதன்படி இலங்கைக்கு 44 வீத வரி விதிக்கப்பட்டது.
பின்னர், அந்தக் கட்டணங்களுக்கு 90 நாள் சலுகை காலம் அறிவிக்கப்பட்டது,
இதனையடுத்தே, இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
நடத்தும் முனைப்பை மேற்கொண்டுள்ளது.
எனினும், பேச்சுவார்த்தை மேசையில், அதிக வரி விதிப்பை தவிர வேறு என்ன
விடயங்கள் விவாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
