Home இலங்கை சமூகம் ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவலின் வெளியீடு

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவலின் வெளியீடு

0

Courtesy: uky(ஊகி)

ஈழ விடுதலைக்காக பெருங்களங்கள் பல கண்ட ஈழத் தளபதியின் கதையை மையமாக வைத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் இன்று வெளிவரவுள்ளது.

இன்று (03.01.2025) மாலை 6 மணிக்கு வெளியீட்டு விழா நிகழ்வுகள் சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெறவுள்ளது.

நடுகல், பயங்கரவாதி நாவல்கள் மூலம் உலகத்தமிழர்களின் கவனத்தை பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வன் சயனைட் நாவலை தனது மூன்றாவது நாவலாக எழுதியுள்ளார்.

இந்திய பல்லாளுமைகள் 

சயனைட் நாவல் வெளியீட்டில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்துறை பல்லாளுமைகள் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிமால் விநாயகமூர்த்தி ஆதரவில் தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவை மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்பாட்டில் பெருங்களங்கள் கண்ட ஈழத்தளபதி ஒருவரின் கதையாக சயனைட் நாவல் அமைந்துள்ளதாக அந்நாவல் வெளியீட்டின் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம் பெயர் பிரதிநிதி நிமால் விநாயகமூர்த்தி, ஃபெட்னா மேனாள் தலைவர் பாலா சுவாமிநாதன், மற்றும் கால்டுவெல் வேள்நம்பி, இயக்குநர் சீனு ராமசாமி, எழுத்தாளர் பவா செல்லத்துரை, ஓவியர் மருது, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் மண்குதிரை ஆகியோர் சயனைட் நாவல் வெளியீட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். 

நிகழ்ச்சி தொகுப்பாளராக பாலமுரளிவர்மன் பங்கெடுக்கவுள்ளார். நாவல் பதிப்பாளராக வேடியப்பன் இருக்கின்றார். 

சயனைட் 

ஈழ விடுதலை போராட்டத்தின் மதிப்பு மிக்க ஒரு குறியீடாக சயனைட் ஈழப்போராளிகளால் நோக்கப்பட்டிருந்தது.

ஈழத்தமிழரின் இருப்புக்கான விடுதலைப் போராட்டத்தினை நடந்திய ஈழப்போராளிகள் எதிரியிடம் உயிரோடு பிடிபட்டு விடக்கூடாது என்ற உயரிய கடப்பாட்டினை பேணி வந்திருந்தனர்.

அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் வகையில் தங்கள் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிந்திருந்தார்கள்.

உலக வரலாற்றில் தகவல் காப்பிற்காக கட்டமைக்கப்பட்ட முறையில் சயனைட் நஞ்சு பயன்படுத்தப்பட்டது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் மாத்திரமே என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

வலி மிகுந்த போராட்டத்தில் பலவீனமான மனித உடலின் பலவீனமான மனித மனங்களின் பலமான தகவல் பாதுகாப்பு ஆயுதமாக ஈழப்போராளிகள் சயனைடினை பயன்படுத்தியிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version