Home உலகம் வெளிநாடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

வெளிநாடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

0

பின்லாந்தில் (Finland) இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூப் சேனலை (YouTube channel) நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதவுக்கு அருகில் இரத்தக்கறை

கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,  உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அயலவர் வீட்டின் கதவுக்கு அருகில் இரத்தக்கறை இருப்பதை முதலில் கண்டதாகவும் கூறப்படுகின்றது.

பின்னர் அவர் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் பின்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/sri-lankan-youtuber-murdered-in-finland-1719460735

NO COMMENTS

Exit mobile version