உக்ரைனிற்கு (Ukraine) எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினர் ரஷ்ய (Russia) பிரஜைகளாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவர்களில் பலர் ரஷ்ய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.
உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுத்தருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு (Ministry of Foreign Affairs) கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய பிராவுரிமை பெற்றுள்ளனர்
இந்த நிலையில் இன்னுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டால் இலங்கையின் பிரஜாவுரிமையை நீங்கள் இழந்துவிடுவீர்கள், நீங்கள் இலங்கை பிரஜை இல்லை என்பதால் உங்களின் சார்பில் பேசுவதற்கு எங்களுக்கு உரிமையில்லை எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதாவது முகாம்களில் உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக சேர்க்கப்படுவதாக தெரிவித்து அவர்களை போருக்குள் சிக்கவைத்துள்ளதாகவும், ஏனையவர்கள் தெரிந்தே இணைந்துகொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.