Home இலங்கை பொருளாதாரம் அடகு வைக்கப்படும் தங்க நகைகள்! இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை

அடகு வைக்கப்படும் தங்க நகைகள்! இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை

0

இலங்கையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உணவுத் தேவைகளுக்காக தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்ப அலகுகள் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு 

“உணவு அடிப்படையிலான தகவல் மற்றும் செயல் வலையமைப்பு” (FLAN Sri Lanka) நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

அமைப்பின் ஆராய்ச்சி அதிகாரி ஷெஹாரி விஜேசிங்கவினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு (2024) மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கொழும்பு, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ மற்றும் மஹரகம பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த கணக்கெடுப்புக்காக, மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து 1352 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களில் 34.3 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாத வருமானம் 

மொத்த மாதிரியில் 62 சதவீதம் பேருக்கு நிரந்தர வருமானம் இல்லை என்பதும், சுமார் 57 சதவீதம் பேருக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை என்பதும் தெரியவந்தது.

இந்த மாதிரியில் உள்ள 35 சதவீத வீட்டுக்காரர்களின் மாத வருமானம் 49,589 ரூபாவாகும்.

கணக்கெடுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அவர்களின் வருமானத்தில் 42 சதவீதத்தை உணவுக்காக செலவழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் 6 சதவீதம் சுகாதாரத்திற்காகவும் அதேபோல் கல்விக்கு 9 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட வீட்டுக்காரர்களில் 60 சதவீதம் பேர் புகைபிடித்தல் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட  குழுவில் 31.7 சதவீதம் பேர் உணவு வாங்க கடன் பெற்றுள்ளதாகவும், தங்க ஆபரணங்களை அடகு வைத்து, சொத்துக்களை விற்று கடனுக்கு பணம் எடுத்தல் போன்றவற்றின் மூலம் உணவுக்கு பணம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது விலை அதிகரித்துள்ள நிலையிலும் மக்கள் அரிசி நுகர்வை குறைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version